இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்துள்ளது. போட்டின்யின் 3-வது நாளிலேயே இந்திய அணியை சுருட்டியிருக்கிறது ஆஸ்திரேலியா.
இதனால் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரோஹித் சர்மாவின் பந்துவீச்சாளர் தேர்வும் பேட்டிங் ஸ்டைலும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர்.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்கிய இரண்டாவதுடெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 180 ரன்களுக்கு சுருண்டது. அதிரடியாக ஆறு விக்கெட்களை கைப்பற்றினார் ஸ்டார்க்.
தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியினர், ட்ராவிஸ் ஹெட்டின் சதத்துடன் 337 ரன்களைக் குவித்தனர். பெரிய இலக்கை துரத்தி, லீடிங் வைக்க வேண்டிய நெருக்கடியில் களமிறங்கிய இந்திய அணி 175 ரன்களுக்கு சுருண்டது. இந்தமுறை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்கள் எடுத்திருந்தார். மூன்றாவது நாளில் 19 என்ற எளிமையான இலக்கைத் துரத்தி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.