ஜூன் 29, 2024-ல் இந்திய கிரிக்கெட் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த விறுவிறுப்பான போட்டியில் இந்தியா வெறும் 7 ரன்கள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றது.
போட்டி கையை விட்டு சென்றுவிடும் சூழலில் பும்ராவும், ஹர்திக் பாண்டியாவும் வீசிய இறுதி ஓவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத்தந்தன.

இந்த வெற்றி கிடைத்த ஓராண்டு நிறைவை கொண்டாடும் சூழலில், தென்னாப்பிரிக்காவை சந்திக்கும் இறுதிப்போட்டிக்கு முந்தைய இரவு படபடப்பாக இருந்தது குறித்து நினைவுகூர்ந்திருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.