அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரிடம் விவாதித்தபோது, “முதல் அதிசயம் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள், இரண்டாவது அதிசயம் உங்கள் கால்கள் சரியாகிவிட்டன.
ஒருவேளை நீங்கள் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பினால் அது மூன்றாவது அதிசயமாக இருக்கும்.
எல்லாவற்றிற்கும் நம்பிக்கையுடன் இருப்போம். சரியான நேரத்தில் அடித்து ஓர் அடி எடுத்து வைப்போம்” என்றேன்.

அப்போது அவர், “சரி அவ்வாறு நடக்கிறது என்றால் அதற்கு எவ்வளவு நாள்கள்?” என்று கேள்வியெழுப்ப, “கிரிக்கெட்டுக்கு திரும்ப 18 மாதங்கள் ஆகும்” என்று நான் கூறினேன்.
அவரின் முழு எண்ணமும் “முடிந்தவரை விரைவாக என்னை இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்யுங்கள்” என்பதுதான்.
அதற்கு, எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த முயற்சித்தோம்.
அவர் மீண்டு வந்தது நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக நடந்தது. அதற்காக, சாதாரண நபர்களை விடவும் கடினமாக அவர் உழைத்தார்” என்று கூறினார்.