ஆர்.சி.பி அணியின் தீவிர ரசிகர் ஒருவர், வருகின்ற ஜூன் 3ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டியில் RCB வெற்றிபெற்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனக் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதிய விசித்திர நிகழ்வு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தக் கடிதத்தை எழுதிய ரசிகர் பெலகாவி பகுதியில் வசிக்கும் சிவானந்த் மல்லன்னவர் எனத் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநில நாளைக் கொண்டாடுவது போல, இந்தத் தினத்தை RCB Fans Festival என மாநிலம் முழுவதும் கொண்டாட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.