ரஷித் கானின் திருமணத்துடன் அவரது சகோதரர்கள் அமீர் கலீல், ஜாகியுல்லா, மற்றும் ரசா கான் திருமணமும் சேர்ந்து நடைபெற்றிருக்கிறது.
திருமணத்துக்கான பாரம்பரிய “பஷ்டூன்’ மக்களின் உடையில் மணமகன்கள் இருப்பதைப் படங்களில் காணலாம்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி நசீப் கான், மூத்த அணி வீரர் முகமது நபி, இளம் வீரர்கள் அஸ்மத்துல்லா உமர்சாய், நஜிபுல்லா சத்ரான், ரஹ்மத் ஷா மற்றும் முஜீப் உர் ரஹ்மான் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.