Ranji Trophy : ‘வெறும் 20 நிமிடங்களில் அவுட் ஆன ரோஹித்’ – இந்திய ஸ்டார்களின் ரஞ்சி சோகம்! | Rohit Sharma dismissed in Ranji Trophy

Share

இதனைத் தொடர்ந்து மும்பை அணிக்காக ரோஹித் சர்மா ஆட முன் வந்தார். ஜம்மு காஷ்மீருக்கு எதிராக மும்பை அணி ஆடும் ஆட்டம் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது. ஜெய்ஸ்வாலும் ரோஹித்தும் ஓப்பனிங் இறங்கினார்கள். ரோஹித் சர்மா வழக்கமாக வெளிக்காட்டும் அட்டாக்கிங் ஆட்டத்தை இங்கே ஆட விரும்பவில்லை. நின்று நிதானமாக ஆடவே நினைத்தார். ஆனாலும் அவரால் ஜம்மு காஷ்மீர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. உமர் என்கிற பௌலர் வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியை அரைகுறையாக லெக் சைடில் அடிக்க முயன்று டாப் எட்ஜ் வாங்கியிருந்தார்.

19 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். பார்டர் கவாஸ்கர் தொடரிலும் இதே மாதிரியே ஒரு ஷார்ட் பாலுக்கு ஒரு இன்னிங்ஸில் விக்கெட்டை விட்டிருப்பார்.

ஜெய்ஸ்வாலும் 4 ரன்களிலேயே அவுட் ஆகியிருந்தார். பஞ்சாப் vs கர்நாடகா போட்டியில் பஞ்சாப் அணிக்காக ஆடி வரும் கில்லும் போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சொற்ப ரன்னுக்கு அவுட் ஆகியிருக்கிறார்.

இந்தியாவின் ஸ்டார் வீரர்கள் ரஞ்சிக்கு வருகிறார்கள் என்றவுடன் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. தங்களின் இழந்த பார்மை மீட்டெடுப்பார்கள் என ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால், இங்கேயும் அவர்கள் சொதப்புவது ரசிகர்களை வேதனையடைய வைத்திருக்கிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com