Pro Kabaddi : இரண்டே ஸ்பாட் மூன்றே போட்டிகள்; தமிழ் தலைவாஸ் அணி `பிளே ஆப்’ க்குத் தகுதி பெறுமா? | Pro Kabaddi Tamil Thalaivas Playoffs Chances

Share

Tamil Thalaivas

Tamil Thalaivas
Pro Kabaddi

தலைவாஸ்க்கு அடுத்த மூன்று போட்டிகளை பார்த்தால் யுபி யோதா, தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுடன் மோத உள்ளனர். இந்த மூன்று போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் நிச்சயம் வெற்றியைப் பெற வேண்டும். பிரதீப் நர்வாலின் யுபி யோதா அணியுடன் மோதும் ஆட்டம் மட்டும் தமிழ் தலைவாஸ்க்கு கடும் சவாலாக இருக்கும். அடுத்த இரண்டு போட்டிகளில் தெலுங்கு டைட்டன்ஸ் ,ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளை எதிர்கொள்ளவிருக்கின்றனர். ஏற்கனவே தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டனர்.

Tamil Thalaivas

Tamil Thalaivas
Pro Kabaddi

தமிழ் தலைவாஸ் எளிதாக இவ்விரண்டு அணிகளையும் வெல்லக்கூடும். ஆனால் அடுத்த மூன்று போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்து தபாங் டெல்லி ,பெங்கால் வாரியர்ஸ், யு மும்பா அணிகளின் முடிவுகளை பொறுத்து தமிழ் தலைவாஸ் ப்ளே ஆப்க்கு செல்வது கடினமாக ஆகிவிடும். எனவே தமிழ் தலைவாஸ் வெற்றிகளை பெரும் முனைப்பில் களமிறங்க வேண்டும்.

தமிழ் தலைவாஸ் அணியில் சாகர் இல்லையென்றாலும் டிஃபென்டர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். நரேந்தர் கண்டோலா மற்றும் அஜிங்கியா பவர் ஆகியோரின் ஆட்டங்கள் சிறப்பாக இருக்கின்றன.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com