Prithvi Shaw: இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கப் போராடிவரும் பிரித்வி ஷா, யாருடைய அனுதாபமும் தனக்கு வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

Share

இந்திய கிரிக்கெட் அணியில் 18 வயதில் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்ததன் மூலம், பின்னாளில் நட்சத்திர வீரராக ஜொலிப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, இப்போது ஆளே காணாமல் போய்விட்டார்.

தனது பாதை மாறியதை உணர்ந்து வருந்தும் பிரித்வி ஷா, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்குக் கடைசி நம்பிக்கையாக உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், உள்ளூர் கிரிக்கெட் தொடரான Buchi Babu Invitational Tournament நடப்பு சீசனில் (ஆகஸ்ட் 18 – செப்டம்பர் 9) சத்தீஸ்கருக்கு எதிரான முதல் லீக் போட்டியில் பிரித்வி ஷா மகாராஷ்டிரா சார்பில் களமிறங்கிச் சதமடித்து அசத்தியிருக்கிறார்.

பிரித்வி ஷா

பிரித்வி ஷா
AP

நேற்று சதமடித்த பிறகுப் பேசிய பிரித்வி ஷா, “மீண்டும் முதலிலிருந்து தொடங்குவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனெனில் என் வாழ்வில் ஏற்றது தாழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன்.

என்மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். எதையும் நான் மாற்ற விரும்பவில்லை.

19 வயதின்போது என்ன செய்தேனோ அதைத்தான் செய்கிறேன். ஏனெனில், அதுதான் இந்திய அணியில் நான் இடம்பெற வழிவகுத்தது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com