தேவையானவை:
முருங்கைக் காய், கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு – தலா 1
கத்திரிக்காய் – 3
சுரைக்காய், பறங்கிக்காய், பலாக்காய், வாழைக்காய் – சிறிதளவு
அவரைக்காய் – 10
ஃப்ரெஷ் மொச்சை – அரை கப்
காராமணி – 10
தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
சின்ன வெங்காயம் – 10 (இரண்டாக நறுக்கவும்)
கறிவேப்பிலை – 20 இலைகள்
புளி – எலுமிச்சை அளவு
தண்ணீர் – 2 கப்
சாம்பார் பொடி – 5 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன்
செய்முறை:
புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைக்கவும். சுரைக்காய், வாழைக்காய், பலாக்காயைத் தோலை நீக்கி ஒரே அளவில் சதுரத் துண்டுகளாக நறுக்கவும். மற்ற காய்கறிகளையும் நறுக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து புளிக்கரைசல், சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் நறுக்கிய காய்கறிகள், ஃப்ரெஷ் மொச்சை, காராமணி, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும், பிரஷர் அடங்கியவுடன் குக்கரைத் திறந்து தாளித்ததைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.