இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது. நாளை மறுநாள் சவுதி அரேபியாவில் ஐ.பி.எல் மெகா ஏலம் (நவம்பர் 24, 25) தொடங்கவிருக்கிறது. இதில், டெல்லி அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டு அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட், இதுவரை ஐ.பி.எல்லில் யாரும் போகாத விலைக்கு ஏலம் போவார் என்று முன்னாள் வீரர்கள் ஆரூடம் கூறிவருகின்றனர்.

மறுபக்கம், இதற்காகத்தான் பண்ட் அந்த அணியிலிருந்து வெளியேறியதாகப் பேச்சுகள் அடிபட்டது. குறிப்பாக முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், `சில வீரர்கள் தங்களது அணியின் உரிமையாளரால் நம்பர் ஒன் தக்கவைப்புத் தொகையை விட அதிக தொகைக்கு தக்கவைப்பதை நீங்கள் பார்க்கலாம். ரிஷப் பண்ட் விஷயத்தில் ஒருவேளை இங்கு கருத்துவேறுபாடு இருந்திருக்கலாம்.” என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றிய பண்ட், தன்னுடைய தக்கவைப்பு என்பது நிச்சயம் பணத்தைப் பற்றியது அல்ல என்று தன்னால் கூற முடியும் என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். இவ்வாறிருக்க, பெர்த் மைதானத்தில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் விளையாடிக் கொண்டிருக்கும் பண்டிடம் களத்தில், ஐ.பி.எல் குறித்து ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன் விளையாட்டாக கேட்டிருக்கிறார்.
SOUND Just two old friends meeting!
Don't miss this stump-mic gold ft. -!
#AUSvINDOnStar 1st Test, Day 1, LIVE NOW! #AUSvIND #ToughestRivalry pic.twitter.com/vvmTdJzFFq
— Star Sports (@StarSportsIndia) November 22, 2024
பண்ட் பேட்டிங் செய்யும்போது, “ஏலத்தில் எங்கு செல்லப்போகிறீர்கள்?” நாதன் லயன் கேட்டார். அதற்கு, “நோ ஐடியா” என்று சிம்பிளாக பதிலளித்தார் பண்ட்.
ஐ.பி.எல் மெகா ஏலத்தில், பண்ட்டை எந்த அணி எடுக்கும், எவ்வளவு தொகைக்கு ஏலம் போவார் என்பது குறித்து உங்களின் கருத்தை கமெண்டில் பதிவிடவும்!