Nudist: கடற்கரைகளுக்கு ஆடை அணிந்துவர தடை; ஜெர்மன் போட்ட விதி

Share

ரோஸ்டாக்கில் உள்ள 15 கிலோ மீட்டர் கடற்கரை, மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிர்வாண பயனர்களுக்கானது, கலந்து பயன்படுத்துவது மற்றும் உடை அணிந்து பயன்படுத்துவது (naturist-only, mixed-use, and textile-only).

இந்த பிரிவுகள் மூலம் அனைவருமே கடற்கரையை அனுபவிக்க முடியும்.

சமீப காலமாக நிர்வாணக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவதனால் ரோஸ்டாக்கில் நிர்வாணம் அனுமதிக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை 37ல் இருந்து 27 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

நிர்வாணச் கலாசாரத்தின் (Nudist Culture) வரலாறு

ஜெர்மனியில் வரலாற்று ரீதியிலான கட்டுப்பாடுகளை உடைத்து 19ம் நூற்றாண்டில் இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் பெரும் பிரிவாக உருவாகினர்.

இவர்கள் நிர்வாணக் கலாசாரத்தை Freikorperkultur (FKK) அல்லது சுதந்திர உடல் கலாசாரம் (Free Body Culture) என அழைக்கின்றனர்.

பல ஆண்டுகளாக ஜெர்மானியர்கள் கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் மலையேற்றப் பாதைகளில் கூட சமூகமாக நிர்வாணத்தைப் பழகுகின்றனர்.

நிர்வாணமாக அரட்டை அடிப்பதும் விளையாடுவதும் இவர்களது பொழுதுபோக்கு.

அவர்களைப் பொருத்தவரை நிர்வாணம் பாலியல் ரீதியானதோ, அவமானமோ கிடையாது. மிகவும் சாதாரணமானது, இயற்கையானது.

ஆனால் இங்கு உலாவ சில எழுதப்படாத விதிகள் உள்ளன. ஒருவரின் உடலை வெறித்துப் பார்க்கக் கூடாது, புகைப்படம் எடுக்கக் கூடாது மற்றும் எதிர்மறையாகத் தேவையற்றக் கருத்துக்களைக் கூறக்கூடாது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com