NRI Corner – வரிக்கு பயந்து முதலீடு செய்யாமல் இருப்பது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சரியா?| mutual fund investment nri explainer on taxes

Share

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு விதிக்கப்படும் வரி மிக மிக அதிகம் என்று வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் நினைக்கத் தேவை இல்லை. காரணம், ரியல் எஸ்டேட் முதலீடாக இருந்தாலும், தங்கத்தில் செய்யப்படும் முதலீடாக இருந்தாலும் சரி அல்லது பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்படும் முதலீடாக இருந்தாலும் சரி, நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு 12.5% வரி விதிக்கப்படுகிறது.

ரியல் எஸ்டேட் அல்லது தங்கத்தில் செய்யப்படும் முதலீடு 50% ரொக்கமாகவும் 50% கணக்கிலும் காட்டப்படுவதால், அதற்குக் குறைவான வரியை மட்டுமே நாம் கட்டுவது போன்ற ஒரு உணர்வு நமக்கு வருகிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடானது முழுக்கவுமே கணக்கில் வந்துவிடுவதால், அதற்குக் கிடைக்கும் லாபம் முழுவதுக்குமே நாம் வரி கட்டுவது போன்ற உணர்வு நமக்கு வருகிறது.

மேலும், ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் போன்ற முதலீடுகள் பணவீக்கத்தைவிட ஒன்றிரண்டு சதவிகிதம் அளவுக்கே லாபம் தருபவையாக உள்ளன. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 10 ஆண்டு என நீண்ட காலத்தில் ஆண்டுதோறும் 12% வரை லாபம் தரத்தக்கதாக உள்ளன. இதில் வரியாக 1% அல்லது 2% குறைந்தாலும், பணவீக்கத்தைவிட 3% அல்லது 4% மேல் லாபம் தரத்தக்கதாக உள்ளது.

இந்தியா போன்ற வளரும் நிலையில் உள்ள பொருளாதாரமானது அடுத்த 20 ஆண்டுகளுக்கு நல்ல வளர்ச்சியைக் காணும் என்பதால், இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் தாராளமாக முதலீடு செய்யலாம். அதிகம் வரி கட்டவேண்டி இருக்கிறதே என்று கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com