Nepal: போராட்டகாரர்கள் தீ வைத்ததில் உயிரிழந்த முன்னாள் பிரதமரின் மனைவி ராஜ்யலக்‌ஷ்மி – என்ன நடந்தது?

Share

நேபாளம் நாட்டில் நடந்துவந்த மாணவர் போராட்டம் இன்று பெரும் வன்முறையாக மாறியிருக்கிறது. அமைச்சர்களின் வீடுகள், பிரதமரின் வீடு, நாடாளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டடம் என அரசு தொடர்பான பல இடங்களையும் ஊடக அலுவலகங்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடியும், தீவைத்து எரித்தும் வருகின்றனர்.

வன்முறையின் ஒரு பகுதியாக முன்னாள் பிரதமர் ஜலந்த் கானலின் வீடு தீ வைக்கப்பட்டது. அதில் சிக்கிய அவரது மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ரகார் உயிரிழந்ததாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் வழங்கப்படவில்லை.

தாக்குதலுக்கு உள்ளாகும்  நேபாளம் நாடாளுமன்றம்

தாக்குதலுக்கு உள்ளாகும் நேபாளம் நாடாளுமன்றம்

ஒரு ஊடக அறிக்கையில் கலகக்காரர்கள் ராஜ்யலக்‌ஷ்மியை அறையில் பூட்டி பின்னர் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. மற்றொன்றில் அவர் கீர்த்திபூர் மருத்துவமனைக்கு தீ காயங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com