வெற்றிமாறனின் `விடுதலை” படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி’, `கருடன்’ எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி.
இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் வரும் மே 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது.
இயக்குநர் பாண்டியராஜி உதவி இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றிருந்தது.
இவ்விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ், “கமர்ஷியல் குடும்பப் படத்துக்கான எல்லாமும் இந்தப் படத்தில் இருக்கு. அதுலயே படத்தின் வெற்றி நிச்சயமாகிவிட்டது.
படம் சூப்பர் ஹிட்தான். சமீபமாக இதயத்திற்கு இலகுவான திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெறும்.