ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ், சமீபத்தில் இந்திய வீரர் விராட்க் கோலியை ஆத்திரமூட்டும் வகையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 விளம்பரம் ஒன்றி பேசியுள்ளார்.
இந்த தொடர் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் விராட் கோலியின் பேட்டிங்கைக் காண ஆர்வமாக இருக்கின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை பிரபலப்படுத்தும் விதமாக எடுக்கப்படும் விளம்பரத்தில், தாடியை ஷேவ் செய்யும் பேட் கம்மின்ஸ் களத்தில் ஒவ்வொரு நாட்டின் பேட்ஸ் மேனையும் எப்படி கிண்டல் செய்து ஆத்திரமூட்டுவது என பயிற்சி செய்துகொண்டிருப்பார்.
Virat Kohli -ஐ கிண்டல் செய்யும் கம்மின்ஸ்!
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதில் கோலி குறித்து, “Hey Kohli, I’ve never seen you bat this slowly. Slowly!” என கேலி செய்கிறார் கம்மின்ஸ்.
கடந்த சில போட்டிகளில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டை கேலி செய்யும் விதமாக கம்மின்ஸ், “கோலி, நீ இவ்வளவு மெதுவாக விளையாடி நான் பார்த்ததே இல்லை” எனக் கூறியதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா கம்மின்ஸ்?
பேட் கம்மின்ஸ் சாம்பியப்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆண்டூ மெக்டொனால்ட், கம்மின்ஸ் அணியில் இணைய வாய்ப்பில் எனக் கூறியிருந்தார்.