இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 6) நாக்பூரில் தொடங்கியது. இந்த முதல் போட்டியில், முழங்கால் வலி காரணமாகக் கோலி இறங்கவில்லை. ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா ஆகியோர் இந்தப் போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகினர். அதேபோல், ஸ்ரேயாஸ் ஐயரும் சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் நேற்று அணியில் இடம்பிடித்தார்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா, ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 39-வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றியடைந்தது. பேட்டிங்கில், ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், அக்சர் படேல் ஆகியோர் அரைசதம் அடித்தனர். குறிப்பாக, ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 59 ரன்கள் அடித்தார். இந்நிலையில், பிளெயிங் லெவனில் ஆடும் வாய்ப்பு தனக்கு எப்படிக் கிடைத்தது என்ற சுவாரஸ்யத்தை ஸ்ரேயாஸ் ஐயர் பகிர்ந்திருக்கிறார்.