KKR vs LSG: "எனது பேட்டிங் மூலம் பதில் சொல்லவே நான் விரும்புகிறேன்"- விமர்சனங்கள் குறித்து பண்ட்

Share

ஐபிஎல் தொடரின் நேற்றைய ( ஏப்ரல். 09) போட்டியில் லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின.

இதில் லக்னோ அணி, கொல்கத்தாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.

இந்நிலையில் அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், ” இந்தப் போட்டியின் முடிவால் நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன்.

KKR vs LSG
KKR vs LSG

ஒரு வீரர் மீது கேப்டனும், அணி நிர்வாகமும் நம்பிக்கை வைக்கும் போது அது அந்த வீரருக்கு நம்பிக்கை தரும். அந்த விஷயத்தை நாங்கள் எங்கள் அணி வீரர்களுக்கு செய்கிறோம்.

ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒரு வீரர் பொறுப்பேற்று முன்னின்று செயல்படுவது, அணிக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வருகிறது.

குறிப்பாகத் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியைக் கட்டுப்படுத்தியது எங்களுக்குப் பெரிய சாதகமாக அமைந்தது.

ஷமி பாய்க்கு வயது கூடிக்கொண்டே போகிறது, ஆனால் அவரின் அனுபவம் அணிக்கு ஈடு இணையற்றது.

சில நேரங்களில் எல்லாப் போட்டிகளிலும் முடிவுகள் சாதகமாக அமையாது, ஆனாலும் அவர் போன்ற ஒருவர் அணியில் இருப்பது மிகப்பெரிய பலம்.

ஷமி பாய் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பந்துவீச்சு குழுவுமே ஒரு அற்புதமான வேலையைச் செய்திருக்கிறது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

தொடர்ந்து அவரது பேட்டிங் பார்ம் குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலளித்த ரிஷப் பண்ட், ” வெளியில் எழும் விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.

எனது பேட் மூலம் அவற்றுக்குப் பதில் சொல்லவே நான் விரும்புகிறேன். நான் எவ்வளவு கடினமாக உழைக்கிறேன் என்பது எனது சக வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் நன்றாகத் தெரியும்.

அதுவே எனக்குப் போதுமானது. நான் எப்போதுமே எனது பயிற்சியில் 200% ஈடுபாட்டுடன் இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com