மறக்க முடியாத Karun Nair-இன் கரியர்
2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 303 ரன்கள் அடித்ததன் மூலம் வெளிச்சம் பெற்றார் கருண் நாயர். அதன்பிறகு அதிகம் சோபிக்காதவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஞ்சி டிராபியில் 8000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணிக்காக இரட்டை சதம் அடித்திருந்தார்.
ஐபிஎல்-லிலும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஒரு போட்டியில் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ் களமிறங்கியவர் 21.83 சராசரியுடன் 131 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். 4வது டெஸ்டில் அவருக்கு பதிலாக சாய் சுதர்ஷன் அணியில் சேர்க்கப்பட்டார். கடைசி போட்டியில் களமிறங்கிய கருண் கடினமான சூழலில் 50 ரன்கள் சேர்த்தாலும் அணியில் அவரது இடத்தைத் தக்கவைக்க அது போதுமானதாக இல்லை.