மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கினேன்!
மேலும், அச்ச உணர்வு எல்லோருக்குள்ளும் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், என்னுடைய கிரிக்கெட் முடிவுக்கு வரும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. அது எங்கே செல்கிறது, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன், இது எப்படி நடந்தது என்ற எண்ணங்கள் உண்டு. அதிலிருந்து நீங்கள் வெளியே வந்து, என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள சிறிது நேரம் எடுக்கும். அப்போது, மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன்.
எனக்கு நானே சில வருடங்கள் கொடுத்து, என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், அதன் பிறகு ஒரு முடிவெடுக்கலாம் என்பதே எனது செயல்முறையாக இருந்தது. மனரீதியாக அதுவொரு கடினமான சூழ்நிலை. இருப்பினும், என்னைப் பற்றியும், எனது கிரிக்கெட்டைப் பற்றியும் நிறைய விஷயங்களை அது எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. அதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இவை எதுவும் இல்லாமல், இப்போது இந்த நிலையில் நான் இருப்பேன் என்று நினைக்கவில்லை” என்று கருண் நாயர் கூறினார்.