K. M Cherian: இருதய அறுவை சிகிச்சையில் துணிச்சலாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்த மருத்துவர்

Share

கே.எம். செரியன்: இந்திய இருதய அறுவை சிகிச்சைத் துறையில் பல சாதனைகள் படைத்த மருத்துவர்

பட மூலாதாரம், Dr. K.M. Cherian/Facebook

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

இருதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் பல சாதனைகளைப் படைத்த கே.எம். செரியன் காலமானார். அவருக்கு வயது 82. இந்தியாவில் இரண்டாவது இருதிய மாற்று அறுவை சிகிச்சையைச் செய்தவர் இவர்.

பெங்களூரில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கே.எம். செரியன் அங்கிருந்து புறப்படவிருந்த நிலையில், மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், அவர் உயிரிழந்தார்.

1942ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி கேரளாவின் செங்கானூரில் பிறந்த செரியன், மணிப்பாலில் உள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துப் படிப்பை முடித்தார். அதற்குப் பிறகு, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.

இதற்குப் பிறகு 1970ல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற அவர், அங்கே இருதய – நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறையில் எஃப்ஆர்ஏசிஎஸ் (FRACS) படிப்பை முடித்தார். சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் சிறிதுகாலம் பணியாற்றிய பிறகு நியூசிலாந்திலும் அமெரிக்காவிலும் சில காலம் பணியாற்றினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com