மேலும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் போட்டியில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்திருந்த ஸ்மிருதி மந்தனாவின் சாதனையையும் (224 ரன்கள்) இரா ஜாதவ் முறியடித்துள்ளார். இத்தகைய சாதனைக்குப் பின்னர் பேசுகையில், மும்பை வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தான் தனது ரோல் மாடல் என கூறிய ஜாதவ், “சில ஆண்டுகளுக்கு முன்பு புனேவில் சிறுவர் மற்றும் சிறுமிகள் கலந்துகொண்டு விளையாடிய கலப்பு அணியில் என்னுடைய முதல் சதத்தை அடித்தேன்.
அது என்னால் நன்றாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது. உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் சார்பாக விளையாட வேண்டும்.” என்று தனது கனவைப் பகிர்ந்தார்.
தனது எட்டு வயது முதல் கிரிக்கெட் விளையாடி வரும் இரா ஜாதவின் பெயர், கடந்த டிசம்பரில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2025 சீசனுக்கான ஏலத்தில் அடிப்படை விலை ரூ.10 லட்சத்துக்குக்கூட யாரும் இவரை ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.