IPL Retentions : ‘ஓய்வை தள்ளிப்போடும் தோனி; அர்ஜூன் டெண்டுல்கரை விடுவிக்கும் மும்பை இந்தியன்ஸ்! ஐ.பி.எல் அப்டேட்ஸ்! |IPL Retentions:Dhoni Delays Retirement; Mumbai Indians Release Arjun Tendulkar – IPL Updates

Share

மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோவிலிருந்து ஷர்துல் தாகூரையும் குஜராத்திலிருந்து ரூதர்போர்டையும் ட்ரேடிங் முறையில் வாங்கிவிட்டதாக அந்த அணியே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சச்சினின் மகனான அர்ஜூன் டெண்டுல்கரையும் அந்த அணி விடுவிக்கவிருக்கிறது.

Shardul Thakur

Shardul Thakur
IPL ScreenShot

கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயர் மற்றும் அவர்களின் கேப்டன் ரஹானேவை விடுவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கொல்கத்தா அணி கே.எல்.ராகுலை ட்ரேடிங் முறையில் அணிக்குள் கொண்டு வர ஆர்வம் காட்டுவதாகவும் கூறுகின்றனர்.

அதேமாதிரி, சன்ரைசர்ஸ் அணியிலிருந்து ஹென்றிச் க்ளாசனும் வெளியேறும் முடிவில் இருக்கிறாராம். சன்ரைசர்ஸிலிருந்து ஷமியை வாங்க டெல்லியும் லக்னோவும் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்.

சென்னை அணியின் முகமான தோனி மேலும் ஒரு சீசனில் ஆடவிருக்கிறார் என்பதை அந்த அணி சிஇஓ காசி விஸ்வநாதனே உறுதி செய்திருக்கிறார். கடந்த சீசன் சென்னை அணிக்கு மிக மோசமான சீசனாக அமைந்தது. ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா போன்றோர் சோபிக்கவே இல்லை. அவர்களை கூண்டோடு சென்னை அணி வெளியேற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை விடுவிக்குமென உங்களின் கணிப்புகளை கமெண்ட் செய்யுங்கள்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com