வெளியூர் சண்ட போதும், இனி உள்ளூர் சண்ட போடுவோம் என சாம்பியன்ஸ் ட்ராபி முடிந்த கையோடு, வருகின்ற சனிக்கிழமை தொடங்கும் ஐபிஎல் தொடரை வரவேற்கக் காத்திருக்கின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். எப்போதும் போல, இந்த முறை கப் அடிப்போம் என்று ஆர்.சி.பி நம்பிக் கொண்டிருக்க, நாங்களும் அதுக்குதான் ஆட்டத்துல இருக்கோம் என்று புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் ஒன்றை விட்டுக்கொடுக்காத பஞ்சாப் கிங்ஸும் தவறாமல் போட்டிக்கு வருகிறது.
ஆனால், இம்முறை கடந்த ஆண்டு கொல்கத்தாவுக்குக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரின் தலைமை, மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸின் கம்பேக், சஹால் – அர்ஷ்தீப் கூட்டணி, 2024 சீசனில் ரூ. 20 லட்சத்துக்குத் தவறாக ஏலத்தில் எடுத்து இப்போது தவிர்க்க முடியாத வீரராக ரூ. 5.50 கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட மிடில் ஆர்டர் நம்பிக்கை ஷஷாங்க் சிங் என டஃப் கொடுக்கும் அணியாகக் காட்சியளிக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.