IPL 2025: “கடினமான தருணங்களில் கோலி எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்'' – கோலி குறித்து சிராஜ்

Share

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இதற்கு முன்பு ஆர்சிபி அணிக்காக விளையாடி இருந்தார்.

சிராஜ்

இந்நிலையில் ஆர்சிபி அணியுடனான தனது நினைவுகளை சிராஜ் பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், “ஆர்சிபி அணியில் இருந்து வெளியேறிப்போது மிகவும் வருத்தப்பட்டேன். எனது கிரிக்கெட் வாழ்வில் சகோதரர் விராட் கோலிக்கு மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறார்.

மிகவும் கடினமான சூழல்களில் இருந்தப்போது என் பக்கம் நின்று ஆதரவு கொடுத்திருக்கிறார். 2018-2019 காலக்கட்டத்தில் அணியில் நான் தக்கவைக்கப்பட காரணமும் அவர்தான். அதன் பிறகுதான் எனது செயல்பாடு மேம்பட்டது.

விராட் கோலி, சிராஜ்
விராட் கோலி, சிராஜ்

ஏப்ரல் 2-ம் தேதி ஆர்சிபி அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் விளையாட உள்ளது. அந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என சிராஜ் கூறியிருக்கிறார்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com