IPL 2025 : ‘ஐ.பி.எல் தொடக்க தேதியை திடீரென மாற்றிய பிசிசிஐ?’ – காரணம் என்ன? | IPL 2025 Schedule Updates

Share

மார்ச் 14 ஆம் தேதி 18 வது ஐ.பி.எல் சீசன் தொடங்கும் என பிசிசிஐ தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று கூடிய பிசிசிஐ யின் நிர்வாகக் குழு கூட்டத்தில் 18 வது ஐ.பி.எல் சீசனின் தேதியை மாற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, மார்ச் 21 ஆம் தேதி சீசன் தொடங்கி மே 25 ஆம் தேதி இறுதிப்போட்டியோடு தொடர் முடியும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தத் தேதி மாற்றத்திற்கு உரிய காரணம் இருப்பதாகவும் தெரிகிறது. ஐ.சி.சியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. ஏற்கெனவே திட்டமிட்டபடி மார்ச் 14 ஆம் தேதி சீசனை தொடங்குவதாக இருந்தால் அது சில அணிகளுக்கு அசௌகரியத்தைக் கொடுக்கும். ஏனெனில், சாம்பியன்ஸ் டிராபியில் ஆடும் முக்கியமான வீரர்கள் ஐ.பி.எல்- க்கு வந்து செட்டில் ஆக ஒரு கால அவகாசமே கிடைக்காது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com