44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியை அபிஷேக் சர்மா, மர்க்ரம் இணை சிறப்பாக ஆடி மீட்டெடுத்தது. சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 42 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 65 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய மார்க்ரமும் 56 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 195 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விரித்திமான் சஹா, ஷப்மன் கில் களமிறங்கினர்.
கில் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லரும் 17 ரன்களில் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய விரித்திமான் சஹா 38 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தார். 16 ஓவரில் 140 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது குஜராத் அணி. அப்போது 24 பந்துகளுக்கு 55 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற சூழலில் திவாட்டியா, ரஷித்கான் இணை ஜோடி சேர்ந்தது. இருவரும் தடுமாற்றமே இல்லாமல் ஹைதராபாத் அணி வீரர்களில் பந்துகளில் சிதறடித்தனர்.
நடராஜன் வீசிய 19-வது ஓவரில் திவாட்டியா 2 சிக்ஸர்களை விளாசினார். இறுதி ஓவரில் 22 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற சூழலில் மேக்ரோ ஜேன்சென் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட திவாட்டியா சிக்ஸ் அடித்து அசத்தினார். அடுத்த பந்தில் திவாட்டிய சிங்கிள் எடுக்க ஸ்டிரைக்குக்கு ரஷித்கான் வந்தார். அவர் 3-வது பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து அசத்தினார்.
4-வது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. கடைசி இரண்டு பந்தில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. இறுதி இரண்டு பந்துகளிலும் சிக்ஸ் அடித்து குஜராத் அணியின் வெற்றியை உறுதி செய்தார் ரஷித்கான். டெத் ஓவர்களில் திவாட்டியா, ரஷித் கான் இணை ஒரு மிரட்டு மிரட்டி எடுத்தது. இந்த வெற்றி மூலம் குஜராத் அணி முதலிடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.