குறிப்பாக நேற்றைய போட்டியில் நங்கூரமாக விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஃபார்முக்கு வந்து சதத்தை அடித்து, 100 ரன்களைக் குவித்தார். அதனால் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா இத்தொடரின் செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்திருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் அந்த அணியை விமர்சித்து பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ” இந்தியாவுக்கு எதிரான போட்டியில் என்ன நடக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் எந்தவித ஏமாற்றமும் எனக்கு இல்லை. உலகெங்கும் ஆறு பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள். உங்களால் சரியாக 5 பந்துவீச்சாளர்களை கூட தேர்வு செய்ய முடியாதா? இரண்டு ஆல்ரவுண்டர்களை மட்டும் வைத்துக்கொண்டு செல்கிறீர்கள்.