INDvNZ: `ஸ்பின்னர்களிடம் மட்டும் 37 விக்கெட்டுகளை இழந்த இந்தியா' – ஒயிட் வாஷ் பின்னணி என்ன?

Share

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இழந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது. இந்தத் தோல்விக்கு இந்திய வீரர்கள் ஸ்பின்னை ஆட முடியாமல் திணறியதும் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

Ind

இந்தத் தொடரில் இந்திய அணியின் மிகப்பெரிய ஏமாற்றம் விராட் கோலி. மூன்று போட்டிகளிலுமே சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. 3 போட்டிகளில் மொத்தமாக 6 இன்னிங்ஸ்களில் 4 இன்னிங்ஸ்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான் ஆட்டமிழந்திருக்கிறார். அதிலும் மூன்று முறை சாண்ட்னர், அஜாஷ் படேல் என இடதுகை ஸ்பின்னர்களுக்குதான் வீழ்ந்திருக்கிறார். கோலி மட்டுமில்லை. இந்தியாவின் டாப் ஆர்டர் மொத்தமுமே ஸ்பின்னர்களுக்கு கடுமையாகத் திணறியிருக்கிறார்கள். டாப் 4 பேட்டர்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். மொத்தமாக 3 டெஸ்ட் 6 இன்னிங்ஸ்களுக்கு 24 விக்கெட்டுகள். இந்த 24 -ல் டாப் 4 விக்கெட்டுகளில் 17 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான் இழந்திருக்கிறார்கள்.

அவரின் கூற்று உண்மை என்றுதான் இந்த நியூசிலாந்து தொடரில் இந்திய அணி நிரூபித்திருக்கிறது. புள்ளி விவரங்களைப் பார்க்கையில் சமீபத்திய சில ஆண்டுகளாகவே ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்திய அணி திணறி வருவதையும் அறிய முடிகிறது.

Ajaz

2010-19 இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு 74.3 பந்துகளுக்கும் ஒவ்வொரு 43.8 ரன்களுக்கும் மட்டுமே இந்திய அணி ஸ்பின்னர்களுக்கு எதிராக 1 விக்கெட்டை இழந்திருக்கிறது. ஆனால், 2020 முதல் இப்போது வரைக்குமான காலக்கட்டத்தில் ஒவ்வொரு 58.6 பந்துகளுக்கும் ஒவ்வொரு 34.1 ரன்களுக்கும் இந்தியா ஸ்பின்னர்களுக்கு எதிராக 1 விக்கெட்டை இழந்திருக்கிறது.

இந்த ஆண்டில் உள்ளூரில் வைத்து இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும் 60 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களுக்கு எதிராக இழந்திருந்தது. வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் 14 விக்கெட்டுகளையும் தற்போது முடிந்திருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 37 விக்கெட்டுகளையும் இந்திய அணி ஸ்பின்னர்களுக்கு எதிராக இழந்திருக்கிறது.

இந்திய வீரர்கள் ஸ்பின்னர்களை நன்றாக ஆடுவார்கள் என்கிற காலம் மலையேறிக் கொண்டிருக்கிறதோ எனும் அச்சத்தையே இந்த புள்ளி விவரங்கள் கொடுக்கின்றன.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com