பார்ட்னர்ஷிப் அமைத்தும் பலனில்லை:
அடுத்த விக்கெட்டுக்கு பட்லரும் ரூட்டும் சேர்ந்து 51 ரன்கள். எல்லாமே நல்ல பார்ட்னர்ஷிப்கள். பேட்டர்கள் நன்றாக செட் ஆகியிருந்தார்கள். அதைப் பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ்களை யாருமே ஆடவில்லை. எதோ ஒரு வீரர் பெரிய சதத்தையோ இல்லை எதோ ஒரு பார்ட்னர்ஷிப் இன்னும் பெரிதாகவோ அமைந்திருந்தால் போட்டி இங்கிலாந்து பக்கமாகத் திரும்பியிருக்கும். தவறவிட்டுவிட்டார்கள்.
ஷமி, ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்ட்யா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் வீசியும் பவர்ப்ளேயில் இந்திய அணியால் விக்கெட் எடுக்க முடியவில்லை. ஸ்பின்னர்கள் அறிமுகமானவுடன் தான் விக்கெட் கிடைத்தது. வருண் சக்கரவர்த்திதான் முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அவருக்கும் ஓடிஐ யில் முதல் விக்கெட் இது. சால்ட் ஒரு பெரிய ஷாட்டுக்கு முயற்சிசெய்து அவுட் ஆனார்.
`வாவ்” ஜடேஜா:
‘ஜடேஜாவை நாம் இன்னும் அதிகமாகக் கொண்டாட வேண்டும்.’ என கடந்த போட்டிக்குப் பிறகு அஷ்வின் பேசியிருந்தார். அது உண்மைதான். இந்தப் போட்டியிலும் கச்சிதமாக வீசி சில முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்திருந்தார். அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பென் டக்கெட் மற்றும் ரூட்டின் விக்கெட்டுகளை டைட்டாக வீசி அவர்தான் வீழ்த்திக் கொடுத்திருந்தார். இருவரில் ஒருவர் நின்று சதம் அடித்திருந்தாலும் அந்த 350 என்கிற இலக்கை இங்கிலாந்து எட்டியிருக்கும். ஜடேஜா அதை நடக்கவிடாமல் தடுத்தார். இவர்கள் போக மூன்று விக்கெட்டுகளை இங்கிலாந்து ரன் அவுட் வழியாகவும் இழந்திருந்தது. லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், மார்க் வுட் என மூவர் ரன் அவுட் ஆகியிருந்தனர். இதில் லிவிங்ஸ்டனின் ரன் அவுட் முக்கியமானது. கட்டாயம் இன்னும் 50 ரன்களை கூடுதலாக அடித்திருக்கலாம் என்றாலும் இங்கிலாந்து அணி எடுத்ததும் நல்ல ஸ்கோரே.