இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.
இந்நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு இந்த வெற்றி முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் அணியின் வெற்றி குறித்துப் பேசிய சுப்மன் கில், “இந்திய அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.
சூழலை உணர்ந்து அதற்கேற்ற யதார்த்தமான சரியான முடிவுகளை எடுக்க வேண்டுமென நினைக்கிறேன்.
சில சமயங்களில் வீரர்களின் தேர்வில் நீங்கள் கறாராகவும் நடந்துகொள்ள வேண்டியிருக்கும்.