IND vs PAK: பாகிஸ்தான் அணி முதல் பேட்டிங் – இந்திய அணியில் யார், யாருக்கு இடம்?

Share

சாம்பியன்ஸ் டிராபி, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது. கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றமாக இமாமுக்குப் பதிலாக அச்சுறுத்தும் பேட்ஸ்மேன் ஃபக்கர் ஜமான் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியைப் பொருத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய அதே அணியே, எந்த மாற்றமும் இன்றி இன்றைய ஆட்டத்திலும் விளையாடுகிறது.

2023-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இருந்து இதுவரையிலும் இந்திய அணி தொடர்ந்து 12 முறை டாஸில் தோற்றிருப்பதாக இஎஸ்பிஎன் இணையதள புள்ளிவிவரம் கூறுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com