Ind Vs Nz: ‘திடீரென ஆட்டத்தை நிறுத்திய நடுவர்; அப்செட் ஆன ரோஹித்; என்ன நடந்தது? | Rohit disappointed over umpires decision

Share

இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்களை எடுத்திருந்தது. சர்ப்ராஸ் கான் சதமடித்திருந்தார். ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி 99 ரன்களை எடுத்திருந்தார். நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் டார்கெட். மாலை 5:15 மணி வரை போட்டிக்கான நேரம் இருந்தது. நியூசிலாந்து அணி பேட்டிங் ஆட வந்த போது இன்றைய நாளின் ஆட்ட நேரம் முடிய கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் இருந்தது. பும்ரா முதல் ஓவரை வீச ஆரம்பித்தார். டாம் லேதம் ஸ்ட்ரைக்கில் இருந்தார். மழை குறுக்கீடுகளுக்கு இடையே பிட்ச் ஈரப்பதமாக இருந்ததால் பும்ராவுக்கு பந்து நன்றாகவே மூவ் ஆனது. நான்கு பந்துகளையும் நன்றாக வெளியேயும் உள்ளேயும் திருப்பியிருந்தார். மூன்றாவது பந்தில் lbw க்கு ரிவியூவ்வும் எடுத்தார்கள். ஆனால், pitching outside leg என்பதால் ரிவியூவை இந்தியா இழந்தது. ஆனாலும் பந்து மூவ் ஆனதை பார்க்கையில் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு விக்கெட் கிடைக்கலாம் எனும் சூழல் இருந்தது. இந்நிலையில்தான் நடுவர்கள் `போதிய வெளிச்சம் இல்லை என்பதால் ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம்’ என்றனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com