IND vs NZ: "இந்திதான் முக்கியமானது.!" – வர்ணனையில் பேசிய சஞ்சய் பங்கர்; வலுக்கும் எதிர்ப்புகள்

Share

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜன.11) வதோதராவில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது.

ind vs nz
ind vs nz

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது.

இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.

இந்நிலையில் இந்தப் போட்டியின் நடுவே இந்திதான் நமது தேசிய மொழி என கிரிக்கெட் வர்ணனையின் போது பேசிய சஞ்சய் பங்கருக்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.

பவுலர் வாஷிங்டன் சுந்தரிடம், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தமிழில் பேசலாமே என வருணையாளர் ஆரோன் கூறியிருக்கிறார்.

வாஷிங்டன் சுந்தர் - கே.எல்.ராகுல்
வாஷிங்டன் சுந்தர் – கே.எல்.ராகுல்

அப்போது, ” தென்னிந்தியர்கள் தங்கள் மாநில மொழிகளில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் இந்திதான் மிகவும் முக்கியமானது. அதுதான் நம்முடைய தேசிய மொழி” என்று சஞ்சய் பங்கர் கூறியிருக்கிறார். அவரின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com