Health: செரிமானம் முதல் புற்றுநோய் வரை… நம் உடலை காக்கும் எல்லை வீரன் இது! | Onion health benefits from digestion to cancer

Share

நம் சமையலறையில் தவிர்க்க முடியாத ஓர் உணவுப்பொருள் வெங்காயம். சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தவிர்த்து, உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் வெங்காயம் காணப்படுகின்றன. இந்தக் கட்டுரையில், சித்த மருத்துவர் விக்ரம் குமார் பெரிய வெங்காயத்தின் மருத்துவப்பயன்கள் பற்றி பேசவிருக்கிறார்.

ஈருள்ளி, சுக்கிரந்தம், நிச்சயம், பலாண்டு, காயம் என்று வெங்காயத்துக்கு பல பெயர்கள் இருக்கின்றன.

வெங்காயத்தின் மணம் மற்றும் நெடிக்குக் காரணம், அதில் கந்தகச் சத்து இருப்பதுதான். இதுதான், அதன் தோலை உரிப்பவர்களை அழ வைத்து விடுகிறது.

ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுகளை வெளியேற்றுவதற்கு உதவி செய்யும் வெங்காயத்தை அப்படியே சாப்பிட்டால், வைட்டமின் சி-யும் இன்னும் சில தாது உப்புக்களும் நம் உடலுக்குக் கிடைக்கும்.

வெள்ளை வெங்காயம்வெள்ளை வெங்காயம்

வெள்ளை வெங்காயம்

அளவுக்கதிகமாக சாப்பிட்ட நாள்களில், கொஞ்சம் வெங்காயம் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.

வெங்காயத்தைப் புற்றுநோய் பரவாமல் தடுத்து நிறுத்தும் ஓர் எல்லை வீரன் என்கின்றன ஆய்வுகள். வெங்காயத்தில் உள்ள `குயிர்செடின்’ (Quercetin) எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருள், காய்ச்சல் முதல் புற்றுநோய் வரை எதுவும் நம் உடலைத் தாக்காமல் பாதுகாக்கக்கூடியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com