பிரஷ் செய்யும்போது நம்மை அறியாமல் ஈறுபகுதியில் குத்தி காயம் (Ulcer) ஏற்படலாம். சிலருக்கு ஓரிரு நாள்களிலேயே அது தானாகவே சரியாகிவிடும். அதற்குப் பிறகும் சரியாகவில்லை என்றால் மருத்துவரை அணுகி அவர்கள் பரிந்துரைக்கும் ஜெல்லை பயன்படுத்தினால் சரியாகிவிடும்.
வலியை மட்டுப்படுத்துவதற்கு காரம், உப்பு குறைவாக இருக்கும் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தச் சமயத்தில் இளநீர் அதிகமாகக் குடிக்கலாம். அதில் இருக்கும் எலக்ட்ரோலைட்ஸ் அதன் எரிச்சலை மட்டுப்படுத்தும்” என்றார் அவர்.
பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.
பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.