Gukesh; Magnus Carlsen; chess; செஸ் வரலாற்றில் முதல்முறையாக கார்ல்சனை குக்கீஸ் வீழ்த்தினார்.

Share

நார்வே செஸ் தொடர் கடந்த மே 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு உலக சாம்பியன் குகேஷும், முன்னாள் உலக சாம்பியனும், உலகின் நம்பர் ஒன செஸ் வீரருமான மேக்னஸ் கார்ல்சன் நேருக்கு நேர் மோதினர்.

முதல் நாளில் நடைபெற்ற முதல் சுற்றில் குகேஷை 55-வது நகர்வில் கார்ல்சன் வீழ்த்தினார். அந்த வெற்றிக்குப் பின்னர், எக்ஸ் தளத்தில் கார்ல்சன், தி வயர் (The Wire) என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் வரும் ஒமர் லிட்டில் கதாபாத்திரத்தின், “You come at the king, you best not miss” என்ற பிரபல வாக்கியத்தைப் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆறாவது சுற்றில் கார்ல்சனுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் குகேஷ் அவரை வீழ்த்தினார்.

குகேஷிடம் முதல்முறையாக தோற்ற விரக்தியில் அங்கேயே செஸ் போர்ட் டேபிளில் ஓங்கிக் குத்துவிட்டு, நிலைமையை உணர்ந்து குகேஷிடம் கைகொடுத்தார் கார்ல்சன். வெற்றியில் இன்ப அதிர்ச்சியில் அடுத்த கணமே குகேஷ் அங்கிருந்து நகர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கார்ல்சனின் இந்த தோல்வி குறித்து அமெரிக்க – ஹங்கேரிய செஸ் கிராண்ட்மாஸ்டர் சூசன் போல்கர், “கிளாசிக்கல் செஸ்ஸில் கார்ல்சன் அரிதாகவே தோற்கிறார். இருவரும் நேர அழுத்தத்தில் இருந்தபோது, ​​கார்ல்சன் ஒரு பெரிய தவறு செய்தார். அது அவரின் தோல்விக்கு வழிவகுத்தது. அவருடைய கரியரில் மிகவும் வேதனையான தோல்வியாக இது இருக்கும். தன்மீதே கார்ல்சன் மிகவும் கோபமாக இருப்பார்.” என்று கூறியிருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com