Gukesh: சந்திரபாபு நாயுடுவின் `Telugu boy' பதிவும் இணையத்தில் வெடித்த கருத்து மோதலும்!

Share

குகேஷ், 18 வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று உலகிலேயே மிகச் சிறிய வயதில் உலக சாம்பியன் ஆனவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்நிலையில் அவரின் தாய்மொழி குறித்து சமூகவலைதளங்களில் ஒரு கருத்து மோதலே ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் ஆந்திரா என இரு மாநில முதல்வர்களும் குகேஷை வாழ்த்தியுள்ளனர். “18 வயதில் மிகச் சிறிய வயதில் உலக சாம்பியன் ஆனதற்கு வாழ்த்துகள் குகேஷ்.

இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தை உனது சாதனை தொடர வைத்துள்ளது. அத்துடன் சென்னை இன்னொரு உலக சாம்பியனை உருவாக்கியதன் மூலம் உலக செஸ் தலைநகரமாக தன்னைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. தமிழ்நாடு உன்னால் பெருமை கொள்கிறது.” எனப் பதிவிட்டிருந்தார்.

குகேஷ் சென்னையில் பிறந்திருந்தாலும் அவரது குடும்பம் ஆந்திராவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என ட்விட்டரில் சிலர் பதிவிட்டு வந்தனர்.

இதனிடையே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “எங்கள் சொந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்” என குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவிலும் குகேஷ் தமிழ்நாட்டைச் செந்த மாநிலமாக கொண்டவர் அல்ல என கமண்ட் செய்திருக்கின்றனர்.

ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, குகேஷை “தெலுங்கு பையன்” (our very own Telugu boy, Indian Grandmaster Gukesh) எனக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

“எங்கள் சொந்த தெலுங்கு பையனுக்கு, இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் உலகிம் மிக இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்று சிங்கப்பூரில் வரலாறு படைத்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உனது வியக்கத்தக்க சாதனையை நாடே கொண்டாடுகிறது. இனி வரும் தசாப்தங்களில் இன்னும் அதிக வெற்றிகளையும், பாராட்டுகளையும் பெற வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார் சந்திரபாபு நாயுடு.

சிலர் சென்னையில் பிறந்தவரை தெலுங்கு பையனாக உரிமை கொண்டாடுவது தவறானது எனக் கூறியுள்ளனர். சந்திரபாபு நாயுடு குகேஷை சமூக ரீதியாக உரிமை கொள்வதாக சிலர் விமர்சித்துள்ளனர்.

சந்திரபாபு நாயுடு குகேஷ் ஒரு இந்தியர் என்பதால் பெருமை கொண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அவர் தவறான பிராந்தியவாதத்தை மேற்கொள்கிறார் என விமர்சித்துள்ளனர். நெட்டிசன்கள் பிற மாநிலத்தவர்கள், குகேஷ் இந்தியர் என்றே அவரைக் கொண்டாட வேண்டும் எனக் கருதுகின்றனர்.

குகேஷ், இளம் வயதில், நாடே பெருமை கொள்ளும் வகையில் பெற்ற ஒரு வெற்றியை கூட இப்படி இணைத்தில் பிரித்து மோதிக்கொள்வது வேதனை கொள்வதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com