Gill : இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

Share

3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷுப் சுழற்சி முடிந்துவிட்டது. இரண்டில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தது. ஒன்றை கூட இந்திய அணி வெல்லவில்லை. வழிகாட்ட சீனியர்கள் பெரிதாக இல்லாத நிலையில் கில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று கொடுத்தால் இந்திய கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக வைத்து கொண்டாடப்படுவார்.

கம்பீர் அணிக்குள் புகுத்த நினைக்கும் குணாதிசயம் குழப்பமானதாகவும் இருக்கிறது. இங்கிலாந்தை போல அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுவதிலும் அவருக்கு நாட்டமிருக்கிறது. ஆஸ்திரேலியாவை போல மரபார்ந்த முறையில் கிரிக்கெட் ஆடவும் விருப்பமிருக்கிறது. ஒரே சமயத்தில் இரண்டு பாணியையும் கையில் எடுங்கள் என வீரர்களுக்கு அறிவுரை கொடுக்கிறார். அது வேலைக்காகவில்லை.

உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒயிட் வாஷ் ஆனதும், பார்டர் கவாஸ்கரில் கோட்டை விட்டதற்கும் இந்த அணுகுமுறை குழப்பம் பெரிய காரணம். கில் இந்த விஷயத்தில் உறுதியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். அணி எந்தத் திசையில் செல்லப்போகிறது, நாம் எந்த அணுகுமுறையைக் கைகொண்டு வழிநடத்தப் போகிறோம் என்கிற விஷயத்தில் கம்பீரின் ஆதிக்கத்தை தாண்டி கில் வெல்ல வேண்டும்.

இந்திய கிரிக்கெட்டுக்கு இணையாக இருந்தது இலங்கை கிரிக்கெட். சீனியர்கள் ஒரே காலக்கட்டத்தில் விடைபெற, பரிணாமக் கட்டத்தை சரியாக கையாள முடியாமல் சரிந்து விழுந்தது. இன்னமும் அவர்கள் முழுமையாக எழவில்லை. இந்திய அணியும் கில்லும் ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டிய ஜாக்கிரதைப் பாடம் அது.!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com