FIFA World Cup 2022 Roundup: சாம்பியனை வீழ்த்திய துனிசியா முதல் பெனால்டியில் சாதனை படைத்த மெஸ்ஸி வரை |FIFA World Cup 2022 Roundup 1-12-2022

Share

1. கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில், ஐரோப்பிய அணிகள் உலகக் கோப்பைப் போட்டிகளின் போது வானவில் வண்ண “One love” ஆர்ம் பேண்ட் அணிந்து கொண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் சில ரசிகர்கள் LGBTQ வானவில் சார்ந்த டீ – ஷர்ட், கொடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர். ரசிகர், ஒருவர் LGBTQ கொடியுடன் மைதானத்தில் ஓடியது குறிப்பிடத்தக்கதாகும். FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 போட்டிகளில் இதுபோன்று சம்பவம் அடிக்கடி நிகழ்வதை தொடர்ந்து, சில விதிமுறைகளுடன் தற்போது அனுமதி அளித்துள்ளது.

2. நேற்று எஜுகேஷனல் சிட்டி மைதானத்தில், குரூப் D பிரிவில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும் துனிசியா அணியும் மோதின. ஏற்கனவே, நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் பிரான்ஸ் அணியில் முன்னணி வீரர்கள் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட துனிசியா அணி, சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் துனிசியா அணி வெற்றி பெற்றது. உலகக்கோப்பை கால்பந்தில் ஐரோப்பிய அணிக்கு எதிராக துனிசியா அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்த ஆறுதல் வெற்றியுடன் தொடரில் இருந்து வெளியேறியது துனிசியா.!

துனிசியா

துனிசியா
FIFA

3. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் அணி, அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததை கொண்டாடிய ஈரானியர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் நேற்று தெரிவித்தன. ஈரானில் ஆட்சிக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. ஈரான் அணி அமெரிக்காவிடம் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டதை, ஈரான் மக்கள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

4. 2022 FIFA உலகக் கோப்பை போட்டி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று இரவு, 974 ரஸ் அபு அபுட் மைதானத்தில் அர்ஜென்டினா அணியும் போலந்து அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், மேக் அல்லிஸ்டெர் மற்றும் அல்வர்ஸ் ஆகியோர் கோல் அடித்தனர். ஆட்ட முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனாலும், ஆட்டத்தின் 39 வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் மெஸ்சி கோல் அடிக்கவில்லை. உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு பெனால்டிகளை தவறவிட்ட முதல் வீரர் என்ற பெருமையை மெஸ்சி பெற்றுள்ளார்.

5. உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒட்டக காய்ச்சல் பரவக்கூடிய சூழல் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது, கொரோனாவை விட கொடியது என்றும், சுவாச பாதிப்பு ஏற்படும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா மற்றும் எம்பாக்ஸ் (குரங்கம்மை) உள்ளிட்ட அதிக ஆற்றல் வாய்ந்த தொற்று ஆபத்துகளை ஏற்படுத்த கூடிய தொற்று வகைகளில் ஒட்டக காய்ச்சலும் ஒன்று என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், கால்பந்து தொடரை காணவரும் ரசிகர்களுக்கும் இவ்வகையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com