பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்
எச்சரிக்கை: சில காட்சிகள் பார்வையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்
20 பெண்களில் ஒருவர், ஏதேனும் ஒரு வகையில் எஃப்ஜிஎம் (FGM) அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவதை எதிர்கொண்டிருப்பார்கள் என ஐ.நா கூறுகிறது.
எஃப்ஜிஎம் என்பது பெண் பிறப்புறுப்பின் பகுதிகள் வெட்டப்படுவதை அல்லது அகற்றப்படுவதைக் குறிக்கிறது. நான்கு வகையான எஃப்ஜிஎம்கள் உள்ளன.
பெண் பிறப்புறுப்பு சிதைப்பு பாலியல் இன்பத்தைக் குறைத்து, தொற்று மற்றும் மலட்டுத் தன்மையைக்கூட ஏற்படுத்தும். இது உளவியல் ரீதியிலான தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
இது குறிப்பாக ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் நிகழ்கிறது. பெண் பிறப்புறுப்பு சிதைப்பை முழுமையாகத் தடை செய்ய ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி வருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு