erode district news : know about famous Idly market in erode

Share

ஈரோடு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த 50 வருட பாரம்பரிய இட்லி கடைகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

ஆவி பறக்கும் இட்லியை தட்டில் பார்த்தாலே உணவுப்பிரியர்கள் ஆவி சிலிர்த்துப் போவர். பாடல் வரிகளில் வருவதுபோல் சப்பாத்தி குருமா சுவைல நம்ம ஊர் இட்லி போல வருமா. காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி. எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளில் இட்லிக்குத்தான் முதலிடம். எத்தனை இட்லியைச் சாப்பிட்டாலும் மிக விரைவிலேயே ஜீரணமாகி விடும்.

விளம்பரம்

தென்னிந்தியாவில், பால்குடி மறந்த குழந்தைகள் முதல் பல் விழுந்த தாத்தாக்கள் வரை, அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவு இட்லி ஆகும். நோயாளிகள், பத்தியம் இருப்பவர்கள், விரதம் இருப்பவர்கள் ஆகிய எல்லோருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இட்லி மாவில், நல்ல பாக்டீரியாக்கள் வளர்கின்றன என்பது ஒரு காரணம். நீராவியில் வெந்த இந்தச் சிற்றுண்டி எளிதில் செரிமானம் ஆகிவிடுவது மற்றொரு காரணம்.

ஈரோட்டில் உள்ள இட்லி மார்க்கெட்

எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை என்பது மூன்றாவது காரணம். அதேவேளை,இட்லியின் தாயகம் இந்தியா அல்ல. இந்தோனேஷியா என்பது ஒரு உணவு வல்லுநரின் கருத்து.ஆக மொத்தத்தில் தட்டில் இருக்கும் குட்டி நிலா போன்ற இட்லி, தென்னிந்தியர்களின் விரும்ப உணவாக உள்ளது.

இப்படி, தமிழர்களின் அன்றாட உணவில் இட்லி ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. என்னதான் நவ நாகரீக உணவுகளை நாம் தேடி தேடி சாப்பிட்டாலும் இட்லிக்கு ஈடு இணையே இல்லை எனலாம். இத்தகைய பெருமைகளை கொண்ட இட்லிக்கெனபெயர் போன இடம் ஒன்று ஈரோட்டில் உண்டு என்றால் நம்ப முடிகிறதா.

இதையும் படிங்க : தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

ஆம், ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் திருநகர் காலனி பகுதியில் சுமார் 50 வருட பாரம்பரிய இட்லி கடைகள் செயல்பட்டுவருகின்றன. பாரம்பரிய முறையில் விறகு அடுப்பில் பெரிய பெரிய இட்லி பாத்திரங்களில் கிட்டத்தட்ட 68 இட்லிகள் ஒரு அடசலுக்கு தயார் செய்கின்றனர். சுமாராக நாள் ஒன்றுக்கு 10,000 இட்லிகள் வரை இங்கு விற்பனையாகிறது. எனவே இது ஒரு இட்லி சந்தை என்றே சொல்லப்படுகிறது.

விளம்பரம்
கூடலூரில் குரு மிளகு சாகுபடி எப்படி செய்கிறார்கள் என்று தெரியுமா.?


கூடலூரில் குரு மிளகு சாகுபடி எப்படி செய்கிறார்கள் என்று தெரியுமா.?

குறிப்பாக, ஈரோடு இட்லி மார்க்கெட்டில் தினமும் குறைந்தபட்சம் 2,000 வாடிக்கையாளர்கள் இட்லி சாப்பிடுகின்றனர். பலருக்கு இந்த இடம் Favorite food spot ஆக உள்ளது. அன்றாடம் இங்கு இட்லி மொத்தவிலையிலும், சில்லறை விலையிலும் விற்பனையாகிறது. வாடிக்கையாளர்களும் குறைந்த விலையில், தரமான உணவை சாப்பிடும் திருப்தி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com