ஈரோடு கிழக்கு காங்கிரஸின் தொகுதி என்பதால் காங்கிரஸே மீண்டும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், திடீரென ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை எனவும், முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திமுக ஈரோடு கிழக்கில் போட்டியிடும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி இடைத்தேர்தல் வரவிருக்கிறது.