ENG vs IND; shubaman gill; இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் கருப்பு சாக்ஸ் அணிந்து விளையாடினார்.

Share

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வாலும் கே.எல்.ராகுலும் சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர்.

அணியின் ஸ்கோர் 100-ஐ எட்டுவதற்குள் 42 ரன்களில் கே.எல்.ராகுலும், 0 ரன்னில் அறிமுக வீரர் சாய் சுதர்சனும் அவுட்டாக, ஜெய்ஸ்வாலும் கேப்டன் கில்லும் கைகோர்த்தனர்.

சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் சதமும், கில் அரைசதமும் அடிக்க இந்த பார்ட்னர்ஷிப் 120+ ரன்கள் குவித்தது.

ஜெய்ஸ்வால்

ஜெய்ஸ்வால்

பின்னர், 101 ரன்களில் ஜெய்ஸ்வாலும் வெளியேற, கேப்டனுடன் துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் இணைந்தார்.

அதன்பிறகு, விக்கெட்டை இழக்காத இவ்விருவரும், முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் அணியின் ஸ்கோரை 359 ஆக உயர்த்தினர். அதோடு, கில் சதமும், பண்ட் அரைசதமும் கடந்தனர்.

இவ்வாறிருக்க, கேப்டனாக முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த கில் மீது ஐ.சி.சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com