ENG vs IND; Jofra Archer; லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 181 பந்துகளில் 61 ரன்கள என கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தபோதும் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.

Share

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமனில் இருந்தன.

மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10-ம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் சதத்தால் 387 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஜஸ்பிரித் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா
BCCI

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ராகுலின் சதம் மற்றும் பண்ட், ஜடேஜா ஆகியோரின் அரைசதங்களால் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், நான்காண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்குத் திரும்பிய ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் முற்றிலுமாகத் தடுமாறி 192 ரன்களில் ஆல் அவுட்டானது.

வாஷிங்டன் சுந்தர் அற்புதமாகப் பந்துவீசி ரூட், ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகள் என மொத்தமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com