Doctor Vikatan: 50 ப்ளஸ் வயதில் எடையைக் குறைக்க திடீரென ஜிம்மில் சேர்வது சரியானதா?| Doctor Vikatan: Is it right to suddenly join a gym at 50 plus?

Share

நடுத்தர வயதில் பெண்களுக்கு இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் சதை போடும். தொப்பை பெரிதாகும்.  இதை “மெனோபாட் ( meno-pot) அல்லது மெனோபட்ஜ்’  (meno-pudge) என்கிறோம். உங்களை ஆக்டிவ்வாக வைத்துக்கொள்வது, நார்ச்சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள். உடற்பயிற்சிகளையும் தவறவிடாதீர்கள். இந்தப் பிரச்னையிலிருந்து உங்களை மீட்க அது மிக முக்கியம். களைப்பாக இருக்கிறது, உடம்புக்கு முடியவில்லை என ஏதாவது சாக்கு சொல்லாமல் உங்களால் முடிந்த ஏதோ ஓர் உடற்பயிற்சியோ, யோகாவோ, சைக்கிளிங்கோ செய்யலாம். 

ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்
freepik

50 ப்ளஸ் வயதில் திடீரென ஜிம்மில் சேர்ந்தாலும் அளவுக்கதிமாக, கடுமையாக வொர்க் அவுட் செய்ய வேண்டாம். குறிப்பாக, கார்டியோ பயிற்சிகளை அளவாகவே செய்ய வேண்டும். கார்டியோ பயிற்சிகளை 20 நிமிடங்கள் செய்துவிட்டு, பிறகு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் ஃப்ளோர் எக்சர்சைஸையும் செய்யலாம்.

மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பது நின்றுவிடுவதால் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு எலும்புகள் வலுவிழக்கும். அதனால் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் ஃபிராக்ச்சர் எனப்படும் எலும்பு முறிவு ஏற்படும் ரிஸ்க் அதிகம். எனவே, ஜிம் சென்று கடுமையான வொர்க்அவுட் செய்வதற்கு பதில் வாக்கிங் செய்வது பாதுகாப்பானது. ஜிம் செல்வதில் உறுதியாக இருந்தால் உங்கள் மகப்பேறு மருத்துவரை கலந்தாலோசித்துவிட்டு முடிவெடுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com