Doctor Vikatan – 16 September 2017 – டாக்டர் டவுட் – வாய்ப்புண் | Doctor Doubt – Stomatitis – Doctor Vikatan

Share

வாய்ப்புண்ணைக் குணப்படுத்த சிகிச்சைகள் உள்ளனவா?

சரியான உணவு முறைகளைக் கடைப்பிடித்தால், பெரும்பாலும் ஒரு வாரத்திலேயே குணமாகிவிடக் கூடிய ஒன்றுதான் வாய்ப்புண். சாதாரணமானது என்றால் மருத்துவர் ஆலோசனைப்படி, அவர் பரிந்துரைக்கும் ஆன்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளிக்கலாம். இதோடு `ஹீலிங் ஜெல்’ எனப்படும் வலி மரத்துப்போகச் செய்யும் ஜெல்களையும் பயன்படுத்தலாம். வலி நிவாரணி மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் விரைவான தீர்வுக்கு வழிவகுக்கும்.

 வாய்ப்புண்ணைத் தடுக்க வழிகள் ஏதும் உண்டா?

வாயைச் சுத்தமாக வைத்திருப்பது என்பது வாய்ப்புண் வராமல் தவிர்ப்பதற்கான அடிப்படை. அதேபோல வாய்ப்புண் வருவதற்கான காரணங்களாகச் சொல்லப்பட்ட புகைபிடித்தல், மது அருந்துதல், பான் மசாலாப் பொருள்களை உபயோகித்தல் போன்றவற்றைத் தவிர்ப்பதும் அவசியமானவை. வாய்ப்புண் வருவதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படும் மன அழுத்தத்தைத் தவிர்ப்பது நல்லது. பற்களைச் சுத்தமாக வைத்திருத்தல், கூரான பற்களை ஒழுங்குப்படுத்துதல், சரியான பல்செட்டைத் தேர்ந்தெடுத்தல் போன்றவையும் முக்கியமானவை.

டாக்டர் டவுட் - வாய்ப்புண்

டாக்டர் டவுட் – வாய்ப்புண்

எப்படிப்பட்ட உணவுகள் உதவும்?

வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்ட சமயத்தில், காரமான உணவுகளைச் சாப்பிடுவது நிச்சயம் இன்னும் பாதிப்பை அதிகப்படுத்தும். குளிர்ச்சி தரும் பால், தயிர், இளநீர், வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்ளலாம். தினமும் மணத்தக்காளி, வெந்தயக்கீரை, பாலக் கீரை போன்றவற்றைக் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை உடலுக்குக் குளிர்ச்சி தரும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். வாய்ப்புண் இருக்கும் நேரத்தில் மசாலா, புளி, உப்பு அதிகம் சேர்த்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.

– ச.ஆனந்தப்பிரியா

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com