நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் தினமும் குறைந்தது 5 ஆயிரம் அடிகள் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப வசதிகளின் காரணத்தால் எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதைக் கணக்கிடுவது மிகவும் சுலபம்.
உடல் பருமனாக இருப்பவர்கள் 5 ஆயிரம் அடிகளை நடக்க ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். அதுவே ஒல்லியான ஒருவர் அதை அரை மணி நேரத்தில் நடந்து முடித்துவிடுவார். எனவே 5 ஆயிரம் அடிகள் என்பது பொதுவாகச் சொல்லப்படுகிற அறிவுரை. அதைத் தாண்டி தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.
நடைப்பயிற்சி என்றில்லை, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதுகூட நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்ல பயிற்சிதான். வாக்கிங்கோ, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதோ, மலையேற்றமோ…. நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கு ஏதேனும் ஓர் உடற்பயிற்சி முக்கியம் என்பதுதான் இதன் அர்த்தம். வாய்ப்பு உள்ளவர்கள் ஜிம்முக்கு சென்றும் வொர்க் அவுட் செய்யலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.