பிரியாணியும் வேண்டும், எடையும் அதிகரிக்கக் கூடாது என நினைப்பவர்கள், பிரியாணி சாப்பிடுவதற்கு முன் ஒரு கப் சூப் குடிக்கலாம் அல்லது தந்தூரி சிக்கனோ, சிக்கன் டிக்காவோ எடுத்துக்கொள்ளலாம். அசைவ பிரியாணி சாப்பிடும்போது காய்கறிகள் சாப்பிட வாய்ப்பில்லை என்பதால் பிரியாணியோடு சேர்த்து வெள்ளரிக்காய் தயிர் பச்சடியோ, வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய் மாதிரி மிக்ஸ்டு வெஜிடபிள் தயிர் பச்சடியோ எடுத்துக்கொள்ளலாம்.
பச்சடி பிடிக்காதவர்கள் பிரியாணியோடு முட்டை அல்லது காய்கறி சாலட் எடுத்துக்கொள்ளலாம். அதன் மூலம் நாம் சாப்பிடும் பிரியாணியின் அளவு குறையும். நிறைய காய்கறிகள் சேர்த்த ஆம்லெட்கூட எடுத்துக்கொள்ளலாம். முட்டை பிரியாணி பிரியர்கள் என்றால் அந்த பிரியாணியில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இருந்தால் போதுமானது.
பிரியாணி சாப்பிடும்போது கூடவே பிரெட் அல்வா போன்ற ஸ்வீட் சாப்பிடும் வழக்கமும் இப்போது பலருக்கும் இருக்கிறது. கூடியவரையில் அதைத் தவிர்த்துவிடலாம். ஒரு கப் சைவ பிரியாணியில் 200 முதல் 250 கலோரிகள் இருக்கும் என்றால் அசைவ பிரியாணியில் அது 300 முதல் 400 கலோரிகள் இருக்கும். வெஜிடபிள் பிரியாணியில் காய்கறிகள் சேர்ப்பதன் மூலமும், அசைவ பிரியாணியில் அசைவ பொருள்கள் சேர்ப்பதன் மூலமும் கலோரி அளவை ஓரளவு குறைக்கலாம். இந்த விஷயங்களை உங்கள் மகனுக்குப் புரிய வைத்து, அதற்கேற்ப உணவுத்திட்டத்தை மாற்றிக்கொள்ளச் சொல்லுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.