Doctor Vikatan: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவிட்டு வாக்கிங் செய்வதுதான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நீங்களோ இதற்கு முன் ஒரு கேள்வியில், வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறீர்களே… எது சரி?
– விகடன் வாசகர், இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.
குறிப்பிட்ட நபரை வெறும் வயிற்றில் வாக்கிங் போகச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்துகிறார் என்றால் அதன் பின்னணியில் வேறு காரணங்கள் இருக்கலாம். அதாவது, அவருக்கு ஏதேனும் மாத்திரைகளைப் பரிந்துரைத்துவிட்டு, அதன் பிறகு வாக்கிங் முடித்துவிட்டு, அதன் பிறகு சாப்பிட்டால் போதும் என்று சொல்லியிருக்கலாம்.
அதுபோன்று மருத்துவக் காரணங்களுக்காக அப்படி அறிவுறுத்தப்பட்டிருப்பவர்கள் மட்டும் அதைப் பின்பற்றலாம்.