Doctor Vikatan: சொட்டு சொட்டாக  வெளியேறும் சிறுநீர்… உடைகளை நனைக்கும் தர்மசங்கடம்… தீர்வு உண்டா? | Even after urinating the clothes get wet by dripping. What is the solution to this problem?

Share

நீண்டகாலமாக புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதன் காரணமாக இருமல் இருக்கும். அவர்களுக்கும் இடுப்பெலும்பு தசைகள் பலமிழக்கலாம். மலச்சிக்கல் உள்ளவர்கள் சிரமப்பட்டு மலம் கழிக்கும்போது ஆசனவாய் பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் மட்டுமன்றி, இடுப்பெலும்பு தசைகளும் பலமிழந்து, சிறுநீர்க் கசிவு பாதிப்பு வரலாம்.

சிறுநீர் கழித்து முடித்ததும் சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்தால், மீண்டும் சிறிது சிறுநீர் வெளியேற வாய்ப்பு உண்டு. ஒருமுறை சிறுநீர் கழித்துவிட்டு வந்ததும் சிறிது நேரத்தில் மீண்டும் சிறுநீர் கழிப்பதும் இதற்கான தீர்வாக அமையும். மருத்துவரை அணுகினால் திரவ உணவுகளைக் கட்டுப்படுத்துவது உட்பட வேறு சில தீர்வுகளையும் சிகிச்சைகளையும் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com